கோவை: தேசிய மக்கள் நீதிமன்றம் – 5540 வழக்குகள் தீர்வு பெற்றன !

X
கோவையில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 5540 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த நீதிமன்றம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை அமர்வு நீதிபதி விஜயா தலைமையில் நடைப்பெற்றது. விசாரணையில் சிறுகுற்றங்கள், காசோலை, வாகன விபத்து, சிவில், வங்கி மற்றும் கல்விக் கடன் வழக்குகள், குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. மொத்த தீர்வு தொகை ₹40.45 கோடியாகும். மேலும், 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 150 வழக்குகள் தீர்க்கப்பட்டன. பிரிந்திருந்த 4 தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ தாமதமின்றி தீர்வு வழங்கப்பட்டது. விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காக, 2022 ஆம் ஆண்டு ஈச்சனாரி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட ஷியாம் பிரசாத் குடும்பத்துக்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.இந்த மாபெரும் மக்கள் நீதிமன்றத்தில் மட்டும், வாகன விபத்து வழக்குகள் 258, காசோலை வழக்குகள் 163 என பல வழக்குகள் முடிவு செய்யப்பட்டன.
Next Story

