கரூரில், அன்புமணி ராமதாஸ் 56வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூரில், அன்புமணி ராமதாஸ் 56வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கரூரில், அன்புமணி ராமதாஸ் 56வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 56வது பிறந்தநாளை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் இடத்தில், கரூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ மலையப்பசாமி உடல் பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன், மாவட்ட அமைப்பாளர் குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஞானசேகரன், முத்துகிருஷ்ணன், பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், மகளிர் அணியினர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறிதல், கண் பரிசோதனை, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. பரிசோதனை முடிவில் தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தனர்.
Next Story