ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்பன் திருக்கோவிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்ப சங்கத்தின் சார்பில் 56வது ஆண்டு மண்டல அபிஷேகம் நடைபெற்றது....*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்பன் திருக்கோவிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்ப சங்கத்தின் சார்பில் 56வது ஆண்டு மண்டல அபிஷேகம் நடைபெற்றது.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் 56 வது ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. கார்த்திகை மாதம் பிறந்து இன்றுடன் 41 நாள் நிறைவடைந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள ஐயப்பன் கோவில்களில் மண்டல பூஜை மற்றும் மண்டல அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் நேற்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை பூர்ணஹதி நடைபெற்ற நிலையில் தொடர்ந்து .திரவியப்பொடி, சந்தனம், பஞ்சாமிர்தம், முப்பழம், பால், நெய் உள்ளிட்ட 30 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 1008 கலசபிஷேகம், 108சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பால்குடம் வீதி உலாவில் ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் பால்குடம் சுமந்து நகர்வலம் வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்பசங்கத்தின் சார்பில் 56 வது ஆண்டாக நடைபெற்ற இன்றைய மண்டல பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



