கனிமொழி அவர்களின்56வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ....*
Virudhunagar King 24x7 |6 Jan 2025 1:06 AM GMT
கனிமொழி அவர்களின்56வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ....*
விருதுநகரில் திமுக மாநில பொதுச் செயலாளரும் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்களின்56வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .... திமுகவின் மாநில மாநில துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களின் 56வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர், அதனை முன்னிட்டு இன்று விருதுநகரில் வடக்கு மற்றும் மேற்கு ஒன்றியம்மகளிர் அணி சார்பாக,ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பாண்டியன் நகர் தேவர் சிலை முன்பு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது, மேலும் இந்த நிகழ்வின்போது மாவட்டம் மகளிர் அணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி, ராதா, வஷிதா ரகுமான் ,வலைதள பொறுப்பாளர் தேன்மொழி, ரோசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ஜெயமுருகன், வடக்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பாரதச் செல்வி, மேற்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சுதா ராணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுதாகர், தொமுச மண்டல பொதுச் செயலாளர் ராஜா செல்வம், மாவட்ட பிரதிநிதி இசக்கி மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுரேஷ் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story