அண்ணா 56-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம்

அண்ணா 56-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு  வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம்
X
பெரம்பலூர் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா 56-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா 56-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா 56-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தலைமை கழக ஆணைக்கினங்க, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., அறிவுறுத்தல்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, காஞ்சித் தந்த காவியத்தலைவர், உலகத் தமிழர்கள் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டிற்க்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் ஓயாது பாடுபட்ட உத்தமர், கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று தம்பிமார் பெரும் படையைக்கண்டு நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன், "'மெட்ராஸ் ஸ்டேட்"" எனும் பெயரை ""தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்கு பெயர் தந்த தனிப்பெரும் தனயன், சுயமரியாதை சுடரொளி, சொக்க வைக்கும் சொற்பொழிவாளர், எழுத்து வேந்தர், பேரறிஞர் அண்ணா அவர்களின் 56-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி,03-,(திங்கட்கிழமை),காலை 9.00 மணியளவில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்(எனது) தலைமையில், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம் சென்று, அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள், கழக பிரமுகர்கள், மகளிரணியினர் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story