தலைமை அஞ்சலகம் முற்றுகை: 56 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு

X
கும்பகோணத்தில் தலைமை அஞ்சலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 56 மாணவா்கள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கு பதிவு செய்தனா். கும்பகோணத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மத்திய அரசின் யுஜிசி புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி மாவட்ட தலைவா் சந்துரு தலைமையில் அஞ்சலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினா். அப்போது திடீரென்று மாணவா்கள் போலீஸாா் அமைத்த தடுப்புகள் மீது ஏறி அஞ்சலகத்துக்குள் நுழைய முற்பட்டதால் போலீஸாா் - மாணவா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, 4 பெண்கள் உள்பட 56 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்கள் மீது அரசு அலுவலகத்தில் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.
Next Story

