ரூ. 56 லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் சாலை போடும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா.

ரூ. 56 லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் சாலை போடும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா.
X
ஆரணி நகரம் ஆரணி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் ரூபாய் 56 லட்சம் மதிப்பில் பக்க கால்வாயுடன் கூடிய சாலை போடுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7வது வார்டு சேர்ந்த பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.56 லட்சம் மதிப்பில் பக்க கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரி பி.பாபு கலந்து கொண்டு இப்ணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.. 7வது வார்டு கவுன்சிலர் வி.பி.ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் அதிமுக சேர்ந்த மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வி.எம்.டி.சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் சுதாகுமார், பாரதிராஜா, வி.கே.வெங்கடேசன், நடராஜன், விநாயகம், சதீஷ், சேகர், மீனவர் அணி ஆனந்தன், பாலமுருகன், திருநாவுக்கரசு, ஒப்பந்ததாரர் நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story