நகராட்சி கூட்டத்தில் 58 தீர்மானங்கள்.
Madurai King 24x7 |12 Dec 2024 12:36 PM GMT
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று (டிச.12) நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பாரத் முன்னிலை வகித்தார். மேலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டு கவுன்சிலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலூர் நகரில் செயல்பட்ட பழைய காய்கறி சந்தையை அகற்றி விட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 787 லட்சம் மதிப்பீட்டில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டது. இந்த புதிய கடைகளுக்கான ஏலம் அறிவிப்பு பல்வேறு காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு 4வது முறையாக ஏற்கப்பட்டு, ஏலம் எடுத்தவர்கள் பெயர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நகர்மன்ற கூட்டத்தில் மொத்தம் 58 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Next Story