அந்தோனி சூசைநாதரின் 58ஆம் ஆண்டு நினைவு; சிறப்பு பிரார்த்தனை!

இறையடியார் அந்தோனி சூசைநாதரின் விண்ணகப் பிறப்பின் 58ஆம் ஆண்டு நினைவு மற்றும் புனிதர் நிலை அடைய சிறப்பு பிரார்த்தனை!
தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை தந்தை பேரருட்திரு ஜோசப் ரவி பாலன் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் தந்தை பேரருட்திரு பிரதீப் அவர்கள் தலைமையில் இறையடியார் அந்தோனி சூசைநாதரின் 58 வது விண்ணக பிறப்பு நாள் நினைவஞ்சலி தூத்துக்குடி கத்தோலிக்க ஆயர் ஆயர் இல்லத்தில் நினைவுகூறப்பட்டது. ஆயர் இல்ல தந்தையர்கள், கல்வி பணிக்குழு, சிறைப் பணிக்குழு, கிறிஸ்தவ வாழ்வுரிமை பணிக்குழு, இளையோர் பணிக்குழு, சமூக நலப்பணிக்குழு, பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணிக்குழு, மற்றும் ஆயர் இல்ல பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து இறையடியாருக்கு புகழ் அஞ்சலி வணக்கம் செலுத்தினார்கள். சிறப்பாக, இறையடியார் அருளாளர் மற்றும் புனிதர் நிலை அடைய சிறப்பு ஜெபம் ஜெபிக்கப்பட்டது. ஜெபமாலை தாசர் துறவற சபையின் அழைப்பின் பெயரில் ஞாயிறு மதியம் மூன்று மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள பாத்திமாகிரி ஆசிரமத்தில் இறையடியார் கல்லறை அமைந்துள்ளது. அங்கு இருக்கும் ஆசிரம சிற்றாலயத்தில் ஜெபமாலைதாசர் துறவற சபையோடு இனைந்து தூத்துக்குடி மறைமாவட்ட அளவில் வடக்கன்குளம் மறைவட்ட தந்தை பேரருட்திரு ஜோசப் கிறிஸ்டியான் மற்றும் ஜெபமாலை தாசர் துறவற சபையின் உயர்மட்ட தலைவர்கள் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றதது. தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இறையடியார் பக்தர்கள் மற்றும் பல்வேறு இறைமக்கள் கலந்து கொண்டு ஜெபித்து கல்லறையை சந்தித்து இறையடியார் ஆசீர் பெற்று சென்றார்கள். இறையடியார் அந்தோனி சூசைநாதர் அவர்கள் 18.12.1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி சின்னக் கோயில் பேராலயம் பங்கில் பிறந்தவர். இறையடியார் அவர்கள் 29 ஆண்டுகள் தூத்துக்குடி மறைமாவட்ட குருவாகவும் 29 ஆண்டுகள் ஜெபமாலை தாசர் துறவற சபையின் துறவியாகவும் வாழ்ந்து 08.06.1968 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தவர்கள். திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு சமூக ஆன்மீக வாழ்வியல் பணிகளைச் செய்தவர்கள். அவர் வாழ்ந்த காலத்தில் பள்ளிகள் அமைத்தல், ஆலயங்கள் அமைத்தல், குடிநீருக்காக கினறுகள் வெட்டுதல், ஏழை எளிய மக்களுக்காக நிலங்கள் வாங்கி குடிஅமர்த்துதல், பட்டுப்பூச்சி வளர்த்தல், கருப்பட்டி சங்கம், விவசாய சங்கம், மீனவர் சங்கம் அமைத்தல், கைவினை பொருட்களான கூடை மற்றும் அலங்கார பொருட்கள் மற்றும் மீன் வலை பின்னுதல் கூடம் அமைத்தல், தையல் பயிற்சி என்று மக்களிடையே பல்வேறு தற்சார்பு தொழிலை ஊக்குவித்த தந்தையை அறிந்த முதல்வர் கர்மவீரர் காமராஜர் மணப்பாடு வரும்போது தந்தையை சந்தித்து அவர்கள் கரங்களால் சிறப்பு ஊக்கத்தொகையும் பாராட்டுக்கள் பெற்றவர். இவர் உருவாக்கிய மதுவிலக்கு சபையை அறிந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு வைகோ அவர்கள் 2012 ஆம் ஆண்டில் பூரண மதுவிலக்கு கோரிக்கையை இவர் தொடங்கிய நெல்லை மாவட்டம் உவரியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலயத்தில் பணி செய்த காலத்தில் பரிசுத்த அமலோற்பவ மாதா வாலிபர் சபை, நற்கருணை பவணி, சப்பர பவணி ஆரம்பித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. உவரியில் பனியாற்றிய காலத்தில் திசையன்விளை பகுதியில் நிறைய பணிகள் செய்து இன்றைக்கும் அவர் பெயர் சாற்றும் அளவில் ஒரு கிராமம் அந்தோனியார் புரம் என்று அவரது பெயரில் இருக்கிறது. பங்குத்தந்தையாக கூடுதாழை, மணப்பாடு புன்னக்காயலில பணி செய்தார்கள். தந்தை அவர்கள் விரைவில் புனிதர் நிலை அடைய சிறப்பு பிரார்த்தனை செய்து அவர் ஆசீர் பெறுவோம்.
Next Story