கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.58.81 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி கமிட்டியில்  ரூ.58.81 லட்சம் வர்த்தகம்
X
வர்த்தகம்
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 58.81 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு 600 மூட்டை உளுந்து, 250 மூட்டை மக்காச்சோளம், 30 மூட்டை வரகு, 25மூட்டை கம்பு, மணிலா 5, ராகி 2, ஒரு மூட்டை பச்சைப்பயிர் என, 913 மூட்டை விளை பொருட்களை விற்பனைக்காக விவசாயிகள்கொண்டு வந்தனர்.ஒரு மூட்டை உளுந்து 7,579 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,394, வரகு 2,055, கம்பு 2,500, மணிலா 10,156, ராகி 2,899, பச்சைப்பயிர் 6,699 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 58 லட்சத்து 81 ஆயிரத்து 158ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
Next Story