வாணியம்பாடியில் 59 குடும்பத்தினர் வீடு கட்ட இடம் கேட்டு சட்டமன்ற அலுவலகத்தில் மனு

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 59 குடும்பத்தினர் வீடு கட்ட இடம் கேட்டு சட்டமன்ற அலுவலகத்தில் மனு கொடுத்து சென்றனர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருத்துவர் காலனி மற்றும் வாணியம்பாடி சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள மருத்துவர் சமூக இன மக்கள் வீடு இல்லாமல் மற்றும் வீடு கட்ட இடமில்லாமல் தவித்து வாழ்ந்து வருவதாகவும் பல கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பல சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் வந்தாலும் எங்களுக்கு விடியல் இல்லை என்று மன குமரலுடன் இன்று ஆதிமருத்துவர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கார்த்திகேயன் தலைவர் இளைஞர் அணி தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் இடம் வேண்டி கோரிக்கை மனுவை வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் அலுவலகத்தில் இன்று 59 குடும்பத்தினர் வாழ சொந்தமாக இடமில்லாமல் வீடு கட்ட இடம் இல்லாமல் வாடகை வீட்டில் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம் எங்களுக்கு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்து இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை வழங்கி ஆதங்கத்தை தெரிவித்தனர்
Next Story

