மழைநீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் பொது மக்களின் பங்களிப்பு தொகை ரூ இரண்டு லட்சத்து 59 ஆயிரத்திற் கான வரைவோலை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆணையாளர் வாசுதேவன்
Tiruchengode King 24x7 |23 Dec 2025 5:30 PM ISTதிருச்செங்கோடு நகராட்சி 31 வது வார்டு கொல்லப் பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் பொது மக்களின் பங்களிப்பு தொகை ரூ இரண்டு லட்சத்து 59 ஆயிரத்திற் கான வரைவோலை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆணையாளர் வாசுதேவன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது
திருச்செங்கோடு நகராட்சி 31 வது வார்டு கொல்லப்பட்டிவீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 350 அடி நீளமுள்ள மழை நீர் வடிகால் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் எழுப்பி வந்த நிலையில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ 7,75,000 மதிப்பீட்டில்பணிகள் மேற்கொள்ள திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது இதில் பொது மக்களின் பங்களிப்பான ரூ. 2,59 ஆயிரத்திற்கான வரைவோயை (DRAFT ) அதே பகுதியைச் சேர்ந்தபொது மக்களின் சார்பில் திருச்செங்கோடு பொறியாளர் சங்க தலைவர் நல்ல குமாரன் திருச்செங்கோடு நகர்மன்றதலைவர் நளினி சுரேஷ் பாபு மற்றும் ஆணையாளர் வாசுதேவன் ஆகியோரிடம் வழங்கினார். நிகழ்ச்சியின் போது நகர்மன்ற உறுப்பினர்கள் தாமரைச்செல்வி மணிகண்டன், W.T.ராஜா புவனேஸ்வரி உலகநாதன்,சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story



