திருப்பத்தூரில் 594 கிலோ போதை பொருட்கள் 13 பேர் கைது
Tirupathur King 24x7 |14 Oct 2024 11:45 AM GMT
திருப்பத்தூரில் 594 கிலோ போதை பொருட்கள் மற்றும் 13 பேர் கைது Sp அதிரடி நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக போலீசார் அதிரடி சோதனையில் 594 கிலோ போதை பொருட்கள் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல்! 13 பேர் கைது! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என கொடுத்த உத்தரவின் காரணமாக கடந்த 11-ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனையில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை, நாற்றம்பள்ளி, வாணியம்பாடி ஆம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்த 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் 13 பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார் ஆகிய இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 594 ஒரு கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் புகையிலை மற்றும் போதை பொருட்களை கடத்தி அதுக்கு விற்பனை செய்தால் 9159959919 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கும் படியும் மேலும் ரகசியம் காக்கப்படும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story