தேங்காய் விற்பனையில் ரூ.59.5 லட்சம் மோசடி: வியாபாரி கைது!

X
தேங்காய் விற்பனையில் ரூ.59.5 லட்சம் மோசடி செய்த வழக்கில், ரவி என்ற வியாபாரி பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சுஜா, வியாபாரி ரவியுடன் இணைந்து 2021-ஆம் ஆண்டு தேங்காய் வணிகம் தொடங்கினர். ஆனால் 2022-ஆம் ஆண்டு, விற்பனையில் 5.23 லட்சம் தேங்காய்களுக்கு கணக்கில்லை என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் இருவரும் புகார் அளித்தனர். விசாரணையில் ரூ.59.5 லட்சம் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்ட ரவி, தலைமறைவான நிலையில் இருந்தார். பின்னர் போலீசார் பொள்ளாச்சி அருகே பதுங்கியிருந்த அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.
Next Story

