சிவகங்கையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

சிவகங்கையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இலவச திருமணம் 

சிவகங்கையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக மாவட்ட துணைசெயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கை மாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இத்திருமணத்தில் 4 கிராம் தாலி உட்பட ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள கட்டில், பீரோ, மெத்தை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

இதில் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டு அர்ச்சதை தூவி வாழ்த்தினர். பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவுடன் திருமண விருந்து நடைபெற்றது‌. இதில் அறநிலையத்துறை குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story