வேலை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.6½ லட்சம் மோசடி
Salem (west) King 24x7 |1 Aug 2024 9:32 AM GMT
போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 65). இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் எங்கள் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி இருவர் சேர்ந்து பணம் கொடுத்தால், எனது மகளுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறினர். இதை நம்பி ரூ.6½ லட்சம் கொடுத்தேன். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது தரவில்லை. இதனால் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story