நாமக்கல்: கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை!
Namakkal King 24x7 |7 Aug 2024 7:13 PM ISTநாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாமக்கல் நகர திமுக சார்பில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி ஏற்பாட்டின் பேரில், நாமக்கல் மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு நகர திமுக சார்பில், மறைந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான, கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக மாநில நிர்வாகிகள் வக்கீல் இளங்கோவன், நக்கீரன், நாமக்கல் நகர் மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, மேற்கு நகர செயலாளர் சிவகுமார், தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், நகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், விஜய் ஆனந்த், மாவட்ட பொறியாளர் அமைப்பாளர் கிருபா, ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் செல்வசீராளன், பேச்சாளர் ராஜகோபால், கலை இலக்கியப் பேரவை பிரபு உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Next Story


