போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனையுடன் கூடிய 6ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனையுடன் கூடிய 6ஆண்டுகள் சிறை தண்டனை
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 06 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,11,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (47) என்பவரை விளாம்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப் அறிவுறுத்தலின் படி விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சர்மிளா, நீதிமன்ற தலைமை காவலர் ஸ்டெல்லா மேரி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் (26.09.2024) இன்று திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சுரேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 06 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,11,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 43 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story