வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல்
Thirukoilure King 24x7 |3 Oct 2024 3:56 AM GMT
பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் காமராஜ் (பொ), கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று காலை வி.அலம்பலம் பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த நிசான் காரை ( டிஎன்25 ஏகே6555 )நிறுத்தி சோதனை செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திச் செல்வது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டம், புதுருனா தாலுகா, மாளியோன் கா கோலியாவை சேர்ந்த புனமாராம்,35; வடநயா தாலுகா, குகாவை சேர்ந்த தினேஷ்குமார்,34; தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கொண்டு வந்து, கடலுார் மாவட்ட கடைகளுக்கு விற்பனை செய்வதும் தெரிந்தது. இதற்காக, வி.அலம்பளத்தில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் 116 சாக்குமூட்டைகளில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,137 கிலோ ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம். புனமாராம், தினேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story