கரூரில் கர்ப்பிணி மனைவி மற்றும் 6- வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவன்.

கரூரில் கர்ப்பிணி மனைவி மற்றும் 6- வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவன்.
கரூரில் கர்ப்பிணி மனைவி மற்றும் 6- வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவன். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, விவிஜி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (45), இவரது மனைவி கல்பனா (42), மகள் சாரதி பாலா (6). தென்காசி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்வ கணேஷ் கடந்த 7 ஆண்டுகளாக வெங்கமேடு பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர் கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செல்வ கணேஷ் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி கல்பனா மற்றும் மகள் சாரதி பாலா ஆகிய இருவரையும், கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, அவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார், மயக்க நிலையில் இருந்த செல்வ கணேஷை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும், கல்பனா மற்றும் சாரதிபாலா ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர். கணவனே கர்ப்பிணியாக இருந்த மனைவி மற்றும் 6 வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story