இடைநின்ற 6 குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உதவிய சார்பு ஆய்வாளருக்கு எஸ்பி பாராட்டு

இடைநின்ற 6 குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உதவிய சார்பு ஆய்வாளருக்கு எஸ்பி பாராட்டு
சாதிசான்றிதழ் இல்லாததால் பள்ளிக்கு செல்லாமல் இடை நின்ற 6 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவிய சார்பு ஆய்வாளருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.
சாதிசான்றிதழ் இல்லாததால் பள்ளிக்கு செல்லாமல் இடை நின்ற 6 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவிய சார்பு ஆய்வாளருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  முத்துராஜா என்பவர் நேற்று (17.12.2024) குளத்தூர் குறிஞ்சிநகர் பகுதியில் புகார் மனு விசாரிக்க சென்ற இடத்தில் பள்ளிக்குச் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்த 6 குழந்தைகளை அழைத்து விசாரித்ததில், சாதிசான்றிதழ் இல்லாமல் பள்ளிக்கு செல்லாமல் இருந்தது குறித்து தெரியவந்துள்ளது. உடனே மேற்படி சார்பு ஆய்வாளர்  முத்துராஜா  6 குழந்தைகளுக்கும் தனது சொந்த செலவில் புத்தகங்கள், பள்ளி சீருடைகள், உபகரணங்கள் வாங்கி கொடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் சாதிசான்றிதழ் பெற்று தர ஏற்பாடு செய்வதாக கூறி குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளார். மேற்படி பள்ளி செல்லாமல் இடை நின்ற 6 குழந்தைகளை மீட்டு சொந்த செலவில் புத்தகங்கள் சீருடைகள் வாங்கிக் கொடுத்து திரும்பவும் பள்ளியில் சேர்த்த சார்பு ஆய்வாளரின் செயலை பாராட்டி இன்று (18.12.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சார்பு ஆய்வாளர்  முத்துராஜாவுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Next Story