சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது
கைது
உளுந்தூர்பேட்டை அடுத்த ஆண்டிகுழியில் பணம் வைத்து சூதாடுவதாக நேற்று முன்தினம் மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலூர் போலீசார் விரைந்து சென்று, பணம் வைத்து சூதாடிய ஆண்டிகுழி சிவக்குமார, 49; ஜெகதீசன், 35; கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த கருவப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன், 45; பண்ருட்டி அடுத்த காமாட்சிபேட்டை மூர்த்தி, 35; வீரபெருமாநல்லூர் பாஸ்கர்,45; மணலுார் ராஜசேகர்,43; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
Next Story