திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து முன்னணியைச் சேர்ந்த 6 பேர் கைது

X

கைது
மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூரிலுள்ள இந்து முன்னணியைச் சேர்ந்த 6 பேரை காவல் துறையினர் முன்னெச்சரிக்கை அடிப்படையில் திங்கள்கிழமை கைது செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இந்துக்கள், இஸ்லாமியர்கள் இடையே சர்ச்சையும், போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம் என்ற கோரிக்கையை முன் வைத்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணியினர் உள்ளிட்ட அமைப்பினர் அறிவித்தனர். இது தொடர்பாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் தஞ்சாவூரில் இந்து முன்ணணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. ஈசான சிவம், மாவட்டச் செயலர் குபேந்திரன், ஒன்றியத் தலைவர் திவாகர் உள்பட 6 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்து, வல்லத்திலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
Next Story