மாதா அமிர்தனந்தமயி தரிசன நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு

மாதா அமிர்தனந்தமயி தரிசன நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு
X
நாகர்கோவில் இறச்சகுளத்தில்
2025 ஆம் ஆண்டு தென்னிந்திய யாத்திரையின் ஒரு பகுதியாக ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தரிசன நிகழ்ச்சி இன்று நாகர்கோவில் அடுத்த இறச்சகுளம் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் வளாகத்தில் (அமிர்தா பல்கலைகழக  வளாகம்) இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.       இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தியானம், உலக அமைதிக்கான பிரார்த்தனைகள், பஜனை மற்றும் சத்சங்கம் ஆகியவை இடம்பெறும்.        இவற்றை தொடர்ந்து ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் அனைவருக்கும் தரிசனமாக உள்ளார். அதிகளவிலான பக்தர்கள் வந்து பங்கேற்க கூடிய வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story