மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சவுடிகள் பறிப்பு

X
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தென்கரை பகுதியில் வசிக்கும் அய்யனார்அம்பலம் மனைவி முத்துவன்னி (80) என்பவர் நேற்று (மார்ச் .14) காலை 6 மணியளவில் தன் வீட்டில் அருகே இயற்கை உபாதைக்காக சென்ற பொழுது மர்ம நபர் அவரது இரண்டு காதிலிருந்த ஆறரை பவுன் மதிப்புள்ள 6 சவுடிகளை பறித்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் முத்துவன்னிக்கு இரண்டு காதிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Next Story

