சேலத்தில் மது விற்ற மூதாட்டி உள்பட 6 பேர் கைது

X
சேலம் மாநகரில் சந்துக்கடைகளில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வோர்களை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். அதன்படி, கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு பச்சப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்துக்கடையில் மது விற்பனை செய்து கொண்டிருந்த சங்கர் என்பவரின் மனைவி சத்யவாணி (வயது 62), மாரியம்மாள் (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், அம்மாப்பேட்டையில் நிர்மல்குமார் (47), பள்ளப்பட்டியில் மாரியப்பன் (25), சூரமங்கலத்தில் சின்னபையன் (58), எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த சேகர் மனைவி சம்பூரணம் (52) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story

