ஆம்பூர் அருகே 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவரின் மண்டை ஓடு காப்புக்காட்டில் கண்டெடுப்பு..

ஆம்பூர் அருகே 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவரின் மண்டை ஓடு காப்புக்காட்டில் கண்டெடுப்பு..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவரின் மண்டை ஓடு காப்புக்காட்டில் கண்டெடுப்பு.. உமராபாத் காவல்துறையினர் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் அடுத்த காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், முரளி கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார், அதனை தொடர்ந்து முரளி வீடு திரும்பாத நிலையில், இவர் எங்கேயேனும் வேலைக்கு சென்றிருப்பார் என அவரது குடும்பத்தினர் எண்ணியிருந்த நிலையில், இன்று, காரப்பட்டு, ஊராட்சிக்குட்பட்ட கருங்குட்டை என்ற காப்புக்காட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அடையாளத்தில், மண்டை ஓடு இருப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்த நபர்கள், அப்பகுதி கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர், அதனை தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் காப்புக்காட்டில் இருந்த மண்டை ஓடு மற்றும் அங்கிருந்த சட்டை மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட துணி, காலணி ஆகியவற்றை கைப்பற்றி, 6 மாதங்களுக்கு முன் காணாமல் முரளியின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்க்கொண்ட போது, அது முரளியின் காலணி, மற்றும் மண்டை ஓடு என்பது தெரியவந்துள்ளது, உடனடியாக மண்டை ஓடு, மற்றும் எலும்பு, காலணி ஆகியவற்றை உமராபாத் காவல்துறையினர் கைப்பற்றி இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் 6 மாதங்களுக்கு முன் காணாமல் போன நபரின் மண்டை ஓடு காப்புக்காட்டில் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story