சமயபுரம் தேர்திருவிழா 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

சமயபுரம் தேர்திருவிழா 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
X
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை தேர்த்திருவிழாவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான தேர்த்திரு விழா வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெ றுகிறது. இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதேபோல ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மர குதிரை உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வருகிற 14-ந்தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்திலும், 17-ந்தேதி அம் மன் முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார். 18-ந்தேதி மாலை அம்ம னுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. தேரோட்டம் முடிந்து 8-ம் நாளான 22-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமய புரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் பிரகாஷ் மற் றும் அறங்காவலர்கள் பிச்சைமணி, ராஜ. சுகந்தி, லட்சுமணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story