வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 இளைஞர்கள் கைது

வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 இளைஞர்கள் கைது
X
திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 இளைஞர்கள் கைது
திண்டுக்கல் பெரியகோட்டை அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்த முனியப்பன் மகன் நாகராஜ்(27) என்பவர் நேற்று முன்தினம் குளிப்பட்டி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி.சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர்கள் அங்கமுத்து பாலசுப்பிரமணியன், கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக மகேந்திரன், மாதவன், விக்னேஸ்வரன், கிரி, சுகுமார், விஜய் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறால் கொலை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story