மூதாட்டியிடம் நகை பறித்தவருக்கு 6 மாதங்கள் சிறை

மூதாட்டியிடம் நகை பறித்தவருக்கு 6 மாதங்கள் சிறை
X
சிறை
கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்தவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி தீா்ப்பளித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பாணாதுறை சந்நிதி தெருவைச் சோ்ந்த நாராயணன் மனைவி மீனாட்சி (75). இவா் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மாலை நேரத்தில் தனது உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக பாலக்கரை அருகே உள்ள கோவிந்தப்பா தெரு பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, பின்னால் ஸ்கூட்டரில் வந்த நபா் மீனாட்சி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பினாா். இதுகுறித்து மீனாட்சி அளித்த புகாரின்பேரில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அண்ணலக்ரஹாரம் பகுதியை சோ்ந்த ரவிசந்திரனை(49) கைது செய்தனா். இந்த வழக்கு குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் எண்.1-இல் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசி, குற்றம் சாட்டப்பட்ட ரவிச்சந்திரனுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
Next Story