இரண்டாவது கணவர் தன்னை 6 முறை கரு கலைப்பு செய்ததாக பெண் பரபரப்பு புகார்

இரண்டாவது கணவர் தன்னை 6 முறை கரு கலைப்பு செய்ததாக பெண் பரபரப்பு புகார்
திருவள்ளூர் வேப்பம்பட்டு May - 19 இரண்டாவது கணவர் தன்னை 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் தன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் உள்ள நிலையில். கணவரின் மாமா தங்களை சண்டை போட வைத்து பிரித்தே வைத்துள்ளதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண் பரபரப்பு புகார். 26 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு தன்னுடன் வாழாமல் கணவர் வீட்டிலும் அனுமதிக்காமல் கொடுமைப்படுத்துவதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண் பரபரப்பு புகார்.
சென்னை காசிமேடு பகுதி மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் துர்கா தேவி. இவருக்கு திருமணமாகி 5 வருடத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மகள்களுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் துர்கா தேவி பணிபுரியும் பகுதிக்கு வந்து சென்றபோது அறிமுகமாகி உள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில். பின்னர் இருவருக்கும் காதலாகி நெருங்கி பழகி வந்துள்ளனர். இதை காரணமாக துர்கா தேவி கர்பம் அடைந்துள்ளார். முதல் கணவருக்கு பிறந்த குழந்தையின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு சென்ற பொழுது தான் கர்பமாக இருப்பதாக பார்த்திபனிடம் துர்காதேவி கூறியுள்ளார். இதனால் தஞ்சாவூரிலே வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த போது பார்த்திபன் அப்பெண்ணை ஏமாற்றி லட்ச கணக்கில் பணம் பறித்து கொண்டு ஏமாற்றி தற்போது உடன் வாழாமல் துரத்தி விடுவதாக ஆவடி காவல் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அப்பெண் கூறுகையில்
துர்கா தேவி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் குழந்தை பிறந்து ஒன்றாக வாழ்ந்து வந்துபோது சில வருடங்களுக்கு முன்னர் கணவர் மஞ்சகாமலை நோயால் இறந்து விட,துர்கா தேவி பெட் ஷாப் ஒன்றில் பணிக்கு சேர்ந்து வேலை செய்து வந்ததாக கூறினார்.அந்த கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் பார்த்திபன் என்பவர் துர்கா தேவியிடம் பழகி வந்துள்ளார்.அப்பொழுது பார்த்திபன் துர்கா தேவி மீதான விருப்பதை கூறியுள்ளார்,மேலும் எனக்கென்று யாரும் இல்லை,உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் துர்கா தேவி தனது முந்தைய வாழ்க்கை குறித்தும் குழந்தைகள் இருப்பது பற்றியும் சொல்லி இருக்கிறார்.இதனை ஏற்றுக்கொண்டு இருவரும் திருமணம் செய்யாமல் நெருங்கி பழகி உள்ளனர்.இந்த சூழலில் துர்கா தேவி கருவுற்றதை பார்த்திபனிடம் கூற தஞ்சாவூரில் தனது மகள் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வுக்கு சென்றபோது அங்கு கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து துர்கா தேவியுடன் வாழ்ந்து வந்த பார்த்திபன் மனைவியை வற்புறுத்தி கடன் வாங்கி பெட் பிசினஸ் செய்து வந்துள்ளார்.பின்னர் அந்த தொழிலை விட்டு, விட்டு வீட்டில் இருந்துள்ளார்.கடன் கொடுக்க வேண்டும்,குடும்பத்தில் பிரச்சனை என துர்காதேவியை 25லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த சூழலில் மலேசியாவில் உள்ள பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு தன்னிடம் பணம் வாங்கி அப்பெண்ணுக்கு செலவு செய்து வந்ததை நீண்ட நாள் கழித்து அறிந்து கொண்ட துர்கா தேவி இது குறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில் பார்த்தீபன் மூலமாக துர்காதேவி 6 முறை கருவுற்றுள்ளார்,இதனை அறிந்து பார்த்திபன் போதையில் திட்டமிடு அடித்து கருவை பலமுறை கலைத்ததாக பகிர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்லார்.மேலும் பார்த்திபனின் தாய்,அவரது சகோதரி ஆகியோர் தன்னை கணவருடன் வாழ விடாமல் பிரித்து வருவதாகவும்,இது பற்றி கேட்க சென்ற போது என்மீது காவல் நிலையத்தில் புகாரளித்தும் மிரட்டுவதாகவும் கூறி கணவர்,அவரது தாய்,சகோதரி ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story