திப்ரூகர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 6½ கிலோ கஞ்சா சிக்கியது

X
ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திப்ரூகரில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று ரெயில்வே போலீசாரும், போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது முன்பதில்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை போலீசார் சோதனை செய்தனர். இதில் 6½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் மீட்டனர். மேலும் இந்த கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

