கோவை: பஸ்நிலையம் அருகே 6 அடி நீள நாகப்பாம்பு மீட்பு

X

செருப்புக் கடை ஒன்றின் முன் இருந்த ஓட்டையில் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு பதுங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகே செருப்புக் கடை ஒன்றின் முன் இருந்த ஓட்டையில் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு பதுங்கியிருந்தது நேற்று கண்டறியப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலர் அனில்குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மிகுந்த லாவகத்துடன் சுமார் 6 அடி நீளமுள்ள அந்த நாகப்பாம்பை பத்திரமாகப் பிடித்தனர். மீட்கப்பட்ட பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் நாகப்பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.
Next Story