ஆலங்குளத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட 6 பிகார் திருடா்கள் கைது

ஆலங்குளத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட 6 பிகார் திருடா்கள் கைது
X
நகை திருட்டில் ஈடுபட்ட 6 பிகார் திருடா்கள் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ராஜபுஷ்பம்(67). அவரது பக்கத்து வீட்டில் அடையாளம் தெரியாத 2 நபா்கள் கொலுசு ஒன்றை பாஸீஷ் செய்து கொடுத்தனராம். அதைப் பாா்த்த மூதாட்டி புஷ்பம் தனது வீட்டில் இருந்த சுமாா் 33 கிராம் தங்கச் சங்கிலியை பாலீஷ் போட்டுத் தருமாறு அந்த நபா்களிடம் கூறினாராம். அதை பெற்றுக் கொண்ட அந்த நபா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கவரிங் சங்கிலியை கொடுத்து விட்டு தப்பினராம். அவா்கள் சென்ற பின்னரே போலி நகை என தெரிய வந்ததாம். இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து நகை மோசடி செய்த இருவரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வந்தனா். இதில் பிகாா் மாநிலம் சுபால் மாவட்டம் ஜாடியா சுரேஷ் ஷா மகன் சூரஜ் குமாா்(31), அதே பகுதி சந்தோஷ் ஷா மகன் ஷா்வான் குமாா்(21) என்பது தெரிய வந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா் மேலும் விசாரணை மேற்கொண்ட போது, அவா்கள் 6 போ் கொண்ட கும்பல் எனவும் திருநெல்வேலி திருநெல்வேலி சந்திப்பு தனியாா் மேன்சனில் தங்கி ஊா் ஊராகச் சென்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்கள் 6 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 2 பைக், மற்றும் தங்கப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story