தென்காசி மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 6 பேர் கைது

X
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளி பனையடிப்பட்டி மணிக்குமார் (42), கஞ்சா வழக்கின் குற்றவாளிகள் சிவகிரி தேவிப்பட்டிணம் கலைசெல்வன் (20), புளியங்குடி வாசுதேவநல்லூர் இளங்கோவன் (29), ஆழ்வார் குறிச்சி அடைச்சாணி மாரியப்பன், போக்சோ குற்றவாளி சங்கரன்கோவில் பழங்கோட்டை வேல்முருகன் (40), ஆலங்குளம் குறும்பலாப்பேரி பிரபாகர் பிரபு (27) ஆகியோர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story

