ஆம்பூரில் 6 புதிய கல் குவாரிகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது..

ஆம்பூரில் 6 புதிய கல் குவாரிகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது..
X
ஆம்பூரில் 6 புதிய கல் குவாரிகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 6 புதிய கல் குவாரிகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் புதியதாக 6 புதிய கல்குவாரிகள் அமைப்பதற்காக பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் இன்று ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாணியம்பாடி கோட்டாச்சியர் அஜிதா பேகம் மற்றும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தொல்காப்பியன் தலைமையில் நடைப்பெற்றது, இதில் விண்ணமங்கலம் மற்றும் காட்டுக்கொல்லை, ரங்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவசாய சங்கத்தினர், மற்றும் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முகிலன் ஆகியோர் பங்கேற்றனர், அப்பொழுது விண்ணமங்கலம் பகுதியில் புதிய கல்குவாரிகள் அமைப்பதற்கு விண்ணமங்கலம் பொதுமக்கள் ஒரு சிலர் ஆதரவித்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருப்பிரிவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்பொழுது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பேச குறைந்த நேரம் மட்டுமே காவல்துறையினர் அனுமதிப்பதாக கூறி காவல்துறையினரிடம் விவசாயிகள், மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் மண்டபத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்..
Next Story