தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
X
பணியிட மாற்றம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் இடமாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். கும்பகோணம் ஆலய நிலங்கள் முன்னாள் தனி வட்டாட்சியர் எஸ். செந்தில்குமார் திருவோணம் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆர். செல்வம் தஞ்சாவூர் வரவேற்பு பிரிவு தனி வட்டாட்சியராகவும், வரவேற்பு பிரிவு தனி வட்டாட்சியர் ஏ. மூர்த்தி பட்டுக்கோட்டை முத்திரக் கட்டண தனி வட்டாட்சியராகவும், பட்டுக்கோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சு. தரணிகா பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், திருவோணம் வட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஜி. சாந்தகுமார் பட்டுக்கோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், பட்டுக்கோட்டை முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியர் எம். பழனியப்பா தஞ்சாவூர் வக்பு வாரிய தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story