உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 6 இடங்களில் நடக்கிறது 

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 6 இடங்களில் நடக்கிறது 
X
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட உள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஆட்சியர் தெரிவித்ததாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஜூலை 15 முதல் நவம்பர் 15 வரை 4 கட்டங்களாக 353 முகாம்கள் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகர்ப்பகுதியில் 45 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 75 முகாம்களும் என 120 முகாம்கள் நடைபெற உள்ளன.  3,13,646 வீடுகளுக்கு சென்று 802 தன்னார்வலர்களால் 15.07.2025 அன்று முதல் 14.08.2025 வரை நடைபெறும் முகாம்களுக்கு 07.07.2025 முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம், 43 சேவைகளும், கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலம், 46 சேவைகளுக்கான மனுக்கள் பெற்று 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மேலும் இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.   ஒவ்வொரு முகாம் நடைபெறும் இடத்திலும் தனியே நான்கு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விண்ணப்பத்தினை பெற்று குடும்ப அட்டை எண், ஆதார் எண், வங்கிக்கணக்கு எண், IFSC Code, ஆகியவற்றை சரியாக பூர்த்தி செய்து அதன் அசலினை காண்பிக்க வேண்டும்.  “கலைஞர் மகளிர் உரிமை” திட்டத்தில், குடும்பத்தில் எவரேனும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற்று வந்தாலும் அந்த குடும்பத்தில் தகுதியுடைய பெண்கள் இருந்தால் விண்ணப்பிக்கலாம். 15.07.2025 (இன்று) உங்களுடள் ஸ்டாலின் முகாம்கள், தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு 1,2,3 -ற்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி திருமண மண்டபம், செல்லியம்மன் கோவில் தெரு, கரந்தை தஞ்சாவூரிலும்,  அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு எண்1,2,3 - செ்ல்லியம்மன் கோவில் திருமணமஹால். அதிராம்பட்டினத்திலும்,  கும்பகோணம் ஊராட்சி அணைக்குடி மஹாராஜபுரம் மானம்பாடி புதூர், செங்கனூர். ஆகிய பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் மானம்பாடி அன்னை லூர்து மஹால் திருமண மண்டபத்திலும்,  பட்டுக்கோட்டை ஊராட்சி செம்பாளுர் ஆலடிக்குமுளை, கரம்பயம், ஆகிய பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் சமூதாயக்கூடம், சமத்துவபுரத்திலும்,  தஞ்சாவூர் ஊராட்சி மேலவெளி ஊராட்சிக்குட்பட்ட சமுதாயக்கூடம், களிமேடு அப்பர் மடம் அருகிலும், மேலவெளி, தஞ்சாவூரிலும்,  அம்மாபேட்டை ஊராட்சிக்குட்ட ஆலங்குடி பஞ்சாயத்து ஆலங்குடி விஷ்ணு மஹால் என்ற திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. முகாம் துவக்க நாளான 15.07.2025 இன்று நகர்ப்புறத்தில் 2 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 4 முகாம்களும் நடைபெறுகிறது என செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
Next Story