பைனான்ஸ் நிறுவனத்தில் 6 லட்சம் கொள்ளை!

பைனான்ஸ் நிறுவனத்தில் 6 லட்சம் கொள்ளை!
X
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை: 6 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக தகவல் மத்தியபாகம் போலீசார் விசாரணை பரபரப்பு
தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ளது தனியார் பைனான்ஸ் தமிழக முழுவதும் சுமார் 40 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கோயமுத்தூரை சேர்ந்தவர் இந்த நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார் தூத்துக்குடியில் மேலாளராக மகேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார் நேற்று இரவு பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு சென்றனர். வழக்கம்போல் இன்று காலை கடையை திறக்க வந்துள்ளனர் அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மத்திய பாகம் காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தினர் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நிதி நிறுவனத்தில் இருந்து ரூபாய் 6லட்சம் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நிறுவனத்தில் சோதனை செய்தனர். இதையடுத்து மோப்பநாய் ஜியா வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது இது தொடர்ந்து எட்டையாபுரம் சாலையில் மோப்பநாய் சிறிது தூரம் ஓடிச் சென்றது இதை தொடர்ந்து காவல்துறையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய திருட்டு கும்பலை தேடி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ருபாய் 6 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story