மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.6கோடி மதிப்பீட்டில் எத்தனால் உற்பத்தி துவக்கம்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.6கோடி மதிப்பீட்டில் எத்தனால் உற்பத்தி துவக்கம்.
X
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.6.67 கோடி மதிப்பீட்டில் எத்தனால் உற்பத்தி துவக்க பூஜை இன்று நடைபெற்றது.
பரமத்தி வேலூர், செப்.3: நாமக்கல் மாவட்டம் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வடிப்பாலையில் ரூபாய் 6.67 கோடி மதிப்பீட்டில் எத்தனால் அலகு உற்பத்தி மேம்படுத்தப்படும் பணிக்கு துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ராஜேந்திரன் எத்தனால் அலகு உற்பத்தி மேம்படுத்தப்படும் பணியை  துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உட்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story