தன்னை தாக்கிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி மனு

தன்னை தாக்கிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி மனு
X
தன்னை தாக்கிய ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயி மனு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ராமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் பாப்பி. ஒரே பகுதியில் தனது விவசாய நிலத்திற்கு செல்லும் பொழுது அதே பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் நிலத்தில் வைத்து தன்னை தாக்கியதாகவும், காயமடைந்த பாப்பி வத்தலகுண்டு மருத்துவமனை மற்றும் தேனி கானா விலக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்றுள்ளார். தன்னை தாக்கியதாக ஆறு பேர் மீது புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாதாரணமாக அவர்கள் காவல் நிலையம் வரை சென்று வருகிறார்கள். வத்தலகுண்டு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா தன்னை தாக்கிய ஆறு பேரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் என தன்னை தாக்கியவர்களே ஏளனமாகவும் பேசி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Next Story