கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது: 6 லட்சம் கள்ள நோட்டுகள் இயந்திரங்கள் பறிமுதல்.

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது: 6 லட்சம் கள்ள நோட்டுகள் இயந்திரங்கள் பறிமுதல்.
கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது: 6 லட்சம் கள்ள நோட்டுகள் இயந்திரங்கள் பறிமுதல். கரூரில் கடந்த 09.09.25ம் தேதி தாந்தோணிமலையில் உள்ள டாஸ்மாக் கடை எண்.4924-இல் காண்டீபன், வயது 52, என்பவர் ரூ.500/- கொடுத்து மதுபானம் வாங்கியபோது மேற்படி கடையில் இருந்த மேற்பார்வையாளர் வேணுவிஜய் என்பவர் காண்டீபன் கொடுத்த ரூ. 500/- கள்ளநோட்டாக இருப்பதாக சந்தேகத்தின்பேரில் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து அவரிடமிருந்து 21 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருச்சியைச் சார்ந்த ராஜேந்திரன் 44, சென்னையில் வசிக்கும் சேலத்தைச் சார்ந்த ஜெயக்குமார் 48, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சானு 44, ஆந்திராவைச் சார்ந்தவர் தற்பொழுது சென்னையில் வசித்து வரும் அர்ஜீன்(எ) விஜயகுமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து தாந்தோனிமலை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். Sp ஜோஸ் தங்கையா இன்று கள்ளநோட்டுகளை ஆய்வு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கரூரில் கள்ளநோட்டு கும்பல் சிக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story