இளைஞர் குத்திக் கொலை கைதான நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 6 பேர் கைது

தூத்துக்குடியில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர் குத்திக் கொலை கைதான நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 6 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
தூத்துக்குடியில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் (எ) சூர்யா (18) என்ற இளைஞர் நேற்று நள்ளிரவு குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு பிரகாஷ் குரூப்பை சார்ந்த திரவியராஜ் (@) ராஜ், பாய் குரூப்பை சார்ந்த விக்னேஸ்வரன் மற்றும் துபிசன் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். மேலும் ஹரிஹரன் என்பவரை அரிவாளால் விரட்டி ஓட விட்டுள்ளனர். இந்த முன்விரோதம் காரணமாக நேற்று இரவு தாளமுத்துநகரில் உள்ள பிரகாஷ் வீட்டிற்கு பாய் குரூப்பைச் சார்ந்த 4 இளம் சிறார்கள் உட்பட 6 பேர் சென்று அங்கு இருந்த சிசிடிவி கேமராவை கத்தியால் உடைத்து விட்டு பிறகு கிருஷ்ணராஜபுரத்தில் முகில் மற்றும் நாகராஜ் என்ற சூர்யாவை தேடி வந்துள்ளனர். அப்போது கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவில் கிழக்கு பகுதியில் சூர்யா (எ) நாகராஜ் மற்றும் முகில் ஆகிய இருவர் நிற்பதை பார்த்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் முகில் தப்பியோடியுள்ளார். ஆனால் நாகராஜ் ஓடாமல் அங்கே நின்றதால் கையில் வைத்திருந்த கத்தியால் ஹரிஹரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து வெட்டியதாக பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில், முகத்திலும் தலையிலும் ரத்த காயம் ஏற்பட்டு நாகராஜ் என்ற சூர்யா மயக்கிய நிலையில், தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் முன் அவர் இறந்துவிட்டார். இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story