ராசிபுரம் அருகே போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது: மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல்...

X
Rasipuram King 24x7 |24 Nov 2025 9:14 PM ISTராசிபுரம் அருகே போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது: மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்வதாக புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் நேற்று இரவு புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி கோமதி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்போது குறுக்குபுரம் அருகே உள்ள பிளாட் ஒன்றில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில் அப்போது அங்கு சென்ற போலீசார் இளைஞர்களை சூழ்ந்து கொண்ட நிலையில் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து இளைஞர்கள் ஓடத் தொடங்கிய நிலையில் 6 இளைஞர்களை மட்டும் புதுச்சத்திரம் காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரது மகன் கோகுல்ராஜ்(27), சாமியப்பன் என்பவரது மகன் கார்த்திக்(20), குமரேசன் என்பவரது மகன் கோகுல்(23), ராஜ்குமார் என்பவர் மகன் பூபதி(24), மாதப்பன் என்பவர் மகன் பிரவீன்குமார்(20), கண்ணன் என்பவரது மகன் பிரவீன்குமார்(22), ஆகிய 6 ஆறு இளைஞர்களையும் புதுச்சத்திரம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இளைஞர்களிடமிருந்து 10 போதை மாத்திரை கொண்ட 3 அட்டைகளையும் மற்றும் போதை ஊசிகளையும், மூன்று இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து 6 பேர் இளைஞர்களையும் காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர்...
Next Story
