கோவை: 6 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது

X
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த சபரிநாதன் (28), கோட்டூர் பகுதி சேர்ந்தவர் நேற்று கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து 6 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டார்.
Next Story

