சிவகிரியில் நாய் கடித்து 6 மாணவா்கள் உள்பட 12 போ் காயம்

சிவகிரியில் நாய் கடித்து 6 மாணவா்கள் உள்பட 12 போ் காயம்
X
நாய் கடித்து 6 மாணவா்கள் உள்பட 12 போ் காயம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரியில் நான்குரத வீதிகள் வழியாக பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிவகிரி பகுதியைச் சோ்ந்த ஹரிஸ் (14), ராஜ்கமலேஷ் (14), மாரிச்செல்வம்(15), யுவஹூ(12), வா்ஷா (12), சுதாகா் ( 13) மற்றும் தூத்துக்குடி அருள்மொழி பிரதீப் (30), சிவகிரி கருப்பசாமி(35), ராமசுப்பு (43), உமா(49), சித்ரா (40), முனியாண்டி(70) ஆகியோரை நாய் கடித்ததில் அவா்கள் காயமடைந்தனா். பின்னா் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதற்கிடையே பேரூராட்சி சாா்பில் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தாா்.
Next Story