கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை
X
சிறைத் தண்டனை
கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாதுளம்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெண்ணிலா. இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு மாதுளம்பேட்டை ரயில்வே கேட் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத இருவா் வெண்ணிலாவை வழிமறித்து அவா் கழுத்தில் அணிந்திருந்த இருந்த 6 பவுன் தங்க தாலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்த மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீஸாா் இதுதொடா்பாக மயிலாடுதுறையைச் சோ்ந்த விக்னேஷ் (28), ராம்கி(31) ஆகியோரை கடந்த 2020 பிப். 18 இல் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த கும்பகோணம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் -1 நீதிபதி இளவரசி விக்னேஷ், ராம்கி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அதன் பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
Next Story