கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.27.05 இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.27.05 இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார். கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடையும் பதிவு பெற்ற/பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.5,00,000/- வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த திரு.பாண்டி த/பெ.முத்துக்குமார், திரு.சின்னமாரிமுத்து த/பெ.சகாதேவன், திரு.சம்பத்குமார் த/பெ.வேலுச்சாமி, திரு.பவுன்ராஜ், த/பெ.கருப்பையா மற்றும் திரு.கருப்பசாமி த/பெ.சங்கிலி ஆகிய 5 கட்டுமானத் தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.25,00,000/- மதிப்பிலான உதவித்தொகைகள் பெறுவதற்கான உத்தரவினையும், திரு.சோணமுத்து த/பெ.மாசிலாமணி என்ற பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளியின் சாலை விபத்து மரணத்திற்கு ரூ.2,05,000/- உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினையும், என ஆக மொத்தம் 6 கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.27,05,000/- மதிப்பிலான உதவித்தொகைகள் பெறுவதற்கான உத்தரவினை மரணமடைந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.
Next Story

