சேலத்தில் கடந்த வாரம் திறக்கப்பட்ட ஜவுளிக்கடையில் ரூபாய் 6 லட்சத்து 85 ஆயிரம் கொள்ளை

சேலத்தில் கடந்த வாரம் திறக்கப்பட்ட ஜவுளிக்கடையில் ரூபாய் 6 லட்சத்து 85 ஆயிரம் கொள்ளை
X
காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் கடந்த பிள்ளையார் சதுர்த்தியன்று ஐந்து ரோடு சந்திப்பு அருகே ஜவுளிக்கடை புதிதாக தொடங்கினார். புதிதாக தொடங்கப்பட்ட இந்த கடையின் மேற்கரையை பிரித்து கொள்ளையடிக்கப்பட்டதாக உரிமையாளர் மணி அழகாபுரம் காவல்நிலையத்த்தில் புகார் தெரிவித்தார். நேரில் வந்த போலீஸார் கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசுவாசமாக உள்ளே சென்று பணத்தை கட்டுகட்டாக எடுத்து வைத்து திருடிச் சென்ற காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அழகாபுரம் போலீஸார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story