ஜோஸ் ஆலுக்காஸ் 60 ம்ஆண்டு விழா

ஜோஸ் ஆலுக்காஸ் 60 ம்ஆண்டு விழா
பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
ஜோஸ் ஆலுக்காஸின் அறுபதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜோஸ் ஆலுக்காஸின் அறக்கட்டளை சார்பாக விருத்தாசலம் சுற்றியுள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மற்றும் விருத்தாசலம் போக்குவரத்து காவல் நிலையதிற்கு தேவையான பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு அழைப்பாளராக விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஜோஸ் ஆலுக்காஸ் திருச்சி மண்டல மேலாளர் கிரேசிஸ் ஆண்ட்ரூஸ் மற்றும் விருத்தாசலம் ஜோஸ் ஆலுக்காஸ் கிளை மேலாளர் மணிகண்டன், துணை மேலாளர் வினு, கணக்கு மேலாளர் சுனில் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story